நடிகர் விஷால் நடித்திருந்த ‘மதகஜராஜா’ திரைப்படம் இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படங்களின் லைன் அப்களை அவர் அறிவித்திருந்தாலும் அதன் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இன்று மதுரைக்குத் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்காகச் சென்றிருக்கிறார் விஷால். திருமணத்தை முடித்துவிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனமும் செய்திருக்கிறார்.
அங்குச் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஷால்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விஷால், “இந்தியா பாகிஸ்தான் போர் தவிர்த்திருக்கலாம். அது தேவையில்லாதது.
எல்லையில் நம்மைப் பாதுகாக்கிற ராணுவ வீரர்கள் உயிரிழக்கிறதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கு. அவங்க கஷ்டத்தைச் சந்திக்கிறது நம்மளால் உணர முடியுது.
அவங்களை நேரில் பார்க்கும்போதுதான் எவ்வளவு கஷ்டப்படுறாங்கனு தெரியும். மதுரை மக்கள் என்னையும் மாறவே மாட்டாங்க.
அதுவும் சில விஷயங்களில் முக்கியமாக மாறவே மாட்டாங்க. அதுல ஒன்னு பாசம், மற்றொன்று உணவு.
எத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் அதே அன்பு, அதே பாசம் கொடுப்பாங்க. இங்க இருக்கிற மக்களும், பல இயக்குநர்களும் என்னுடைய சொந்த ஊர் மதுரைனுதான் நினைச்சுட்டு இருக்காங்க. இன்னைக்கு என்னுடைய தம்பி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் திருமணம்.

நான்தான் தாலி எடுத்துக் கொடுக்கணும்னு சொன்னான். மதுரைக்கு வந்துட்டு மீனாட்சி அம்மனைப் பார்க்காமல் போனா எங்க அம்மா என்னை வீட்டுலயே சேர்க்கமாட்டாங்க. அம்மாவும் ஒரு புடவை கொடுத்துவிட்டாங்க.
அதை அம்மனுக்குக் கொடுத்துட்டு சாமி தரிசனம் செய்தேன். இதே இடத்துல 2006-ல திமிரு படத்தோட படப்பிடிப்பு நடந்தது.
இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் நல்லா உழைக்கணும், சமூகத்துக்கு நல்லது செய்யணும்னு எண்ணம் வருது. நீ நல்லா வரணும்னு அம்மாதான் எப்போதும் சொல்வாங்க.
ஆனால், இங்க இருக்கிற பெரியவர்கள் அனைவரும் அதைச் சொல்லும்போது எனக்கு ஊக்கம் கிடைக்குது. அடுத்தடுத்து நல்ல படங்கள் பண்ணணும்னு ஊக்கப்படுத்துது. இன்னும் நான்கு மாதங்களில் நடிகர் சங்கக் கட்டடம் வந்திடும்” என உற்சாகத்துடன் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…