அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பாம் ஸ்பிரிங்ஸில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்தார் மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் இது பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெடிகுண்டு வைத்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பை நடத்தியவர் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கை எட்வர்ட் பார்ட்கஸ் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக FBI தெரிவித்துள்ளது. […]
