நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது, இதன் மூலம் ஐபிஎல் 2025ல் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்நிலையில் சேஸிங்கில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி இருந்தார். 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்திருந்தார். அப்போது கவர் திசையில் 6 அடிக்க முயன்ற போது திக்வேஷ் ரதி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஷர்துல் தாகூர் சிறப்பாகா கேட்ச் பிடித்து இருந்தார்.
மேலும் படிங்க: 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வில் Fail ஆனாரா வைபவ் சூர்யவன்ஷி? உண்மை என்ன?
அபிஷேக் சர்மாவை அவுட் ஆக்கியவுடன் திக்வேஷ் ரதி தனது வழக்கமான சைன் போடும் விதத்தில் செலிபிரேஷனை செய்தார். இது அபிஷேக் சர்மாவை கோபமடைய செய்தது. உடனடியாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக நடைபெற்றது. உன் முடியை பிடித்து இழுப்பேன் என்பது போல சைகை செய்தார் அபிஷேக் சர்மா. இது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே நடுவர்கள் இரண்டு பேரையும் சமாதானப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. போட்டி முடிந்த பிறகு ராஜீவ் சுக்லா இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.
இந்த ஆண்டு லக்னோ அணிக்காக அறிமுகமான திக்வேஷ் ரதி விக்கெட்கள் எடுத்தவுடன் தன்னுடைய செலிபிரேஷனுகாக தொடர்ந்து அபராதம் செலுத்தி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் இதற்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் தனது செலிபிரேஷனில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர் கொண்டு வரவில்லை. இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் தற்போது உருவாகி உள்ளது. இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய திக்வேஷ் ரதி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
Abhishek Sharma and Digvesh Rathi from. pic.twitter.com/CJpOsQZtOl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 19, 2025
Digvesh Rathi Vs Abhishek Sharma. pic.twitter.com/LzjJBk19uR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 19, 2025
மேலும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் மிரட்டல் வெற்றி… ராஜஸ்தான் படுமோசம் – பிளே ஆப் ரேஸ் எப்படி இருக்கு?