உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏஜென்ட் மருத்துவமனை என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனை முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் பணியாற்றும் ஒரு மெய்நிகர் மருத்துவ வசதி கொண்டது. இந்த AI மருத்துவமனை நவீன மருத்துவத்தை மறுவரையறை செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த முயற்சி, ஒரு […]
