CSK புள்ளிப்பட்டியலில் முன்னேற இதுதான் ஒரே வழி..

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி உள்ளது சென்னை சூப்பர் கிப்ஸ் அணி. அந்த அணி விளையாடிய 12 போட்டிகளில் வெறும் 3ல் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் சுற்றைவிட்டு வெளியேறிய நிலையில், தொடரை முடிக்கும்போது, குறைந்தபட்சம் கடைசி இடத்தில் முடிகாமலாவது இருக்க வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஒன்று ராஜஸ்தானுடனும், மற்றொரு போட்டி குஜராத் டைட்டன்ஸ் உடனும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி இன்று (மே 20) டெல்லியில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிவிடும். ஏனென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நடப்பாண்டின் கடைசி போட்டி இதுவாகும். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 12 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிப்பட்டியலுடன் 10வது இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால், சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தினால், சென்னை அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேறும். ராஜஸ்தான் அணி தோற்கும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் 2025 ஐபிஎல் தொடரை முடித்துக்கொள்ளும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இத்தொடரில் பல தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், சுமார் 5 போட்டிகளைல் வெற்றிக்கு அருகில் சென்று தோற்றது. 

எனவே சென்னை அணியுடன் அந்த அணி வெல்லுமா? என்பது சந்தேகமே. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த போட்டி குஜராத் அணியுடன் உள்ளது. அப்போட்டி சென்னை அணிக்கு கடினமாக இருக்கும் என்பதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதே சென்னை அணிக்கு இருக்கும் ஒரே வழி ஆகும்.  

மேலும் படிங்க: மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் – திக்வேஷ் ரதி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மேலும் படிங்க: திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.