எங்களின் அடுத்த ஆண்டுக்கான திட்டம் இது தான் – ஸ்டீபன் ஃப்ளெமிங் முக்கிய தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 சீசன் ஒரு மறக்க வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.  ஐபிஎல் 2025 தொடரில் இருந்து முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டும் இதே போல தோல்வியை பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்து முறை கோப்பையை வென்று இருந்தாலும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறை. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங், பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்தும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

கடந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கைகுவாட் பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து சென்னை அணியின் தோல்விகள் தொடங்க ஆரம்பித்தது. இந்த ஆண்டும் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்து தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்தனர். இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். நேற்று விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேலும் படிங்க: எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் – தோனி சொன்னது யாரை தெரியுமா?

ஸ்டீபன் பிளமிங் சொன்ன முக்கிய தகவல்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், “நாங்கள் விளையாடிய ஆட்டத்திற்கு கடைசி இடம் தான் சரியாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் தான் நாங்கள் விளையாடி உள்ளோம். இது ஒரு மறக்க முடியாத அனுபவம், ஆனால் நாங்கள் செய்ய விரும்புவது அணியில் உள்ள வீரர்களின் முழு திறனை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறோம். புள்ளி பட்டியலில் கடைசி நேரத்தில் இருக்க எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இது எங்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும். நாங்கள் நல்ல செயல் திறனை காட்ட விரும்புகிறோம். சிலவற்றை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். இந்த சீசனில் நாங்கள் எடுத்து சில முடிவுகள் சரியாக அமையவில்லை.

குறிப்பாக பேட்டிங் ஆர்டர் எங்களுக்கு சரியாக இல்லை, அதை நாங்கள் சரி செய்ய முயற்சித்து வருகிறோம். அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான யோசனைகள் எங்களிடம் உள்ளன. அணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் அடுத்த ஆண்டு சரி செய்யப்படும். பவர் பிளேயில் சிறப்பாக விளையாடுவது முக்கியம். வீரர்களை போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி இறக்கி வருகிறோம். அணியில் உள்ள ஒவ்வொன்றையும் சரி செய்ய முயற்சிக்கிறோம்.

பத்திரனாவின் பார்ம் நாங்கள் விரும்பியபடி இல்லை. நாங்கள் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்,  அதனால் தான் அவரை தக்க வைத்துக் கொண்டோம். தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போது அவர் பார்மில் இல்லை. அவர் மீண்டும் பழைய பார்மிற்கு வர நேரம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். பத்திரனாவின் பவுலிங்கை பேட்டர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர், எனவே அவர் புதிய யோசனைகளுடன் வர வேண்டும் என்று நினைக்கிறேன். கம்போஜ் நன்றாக பந்து வீசுகிறார், இன்னும் சிம் மற்றும் ஸ்விங் செய்யும் திறமைகளை வளர்த்து கொண்டால் சிறப்பாக செயல்படுவார், அவருக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.