பெங்களூரு,
கர்நாடகாவில் பெங்களூரு நகருக்கு உட்பட்ட சூரியா நகர் எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுப்பு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர் வேண்டுகோளாக கேட்டு கொண்டபோதும் அவர் கன்னடத்தில் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதனை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவில், அனிகல் தாலுகாவுக்கு உட்பட்ட சூரியா நகர் பகுதியில் அமைந்த எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்ததும், குடிமக்களை கவனத்தில் கொள்ளாததும் என அவருடைய அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்து விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக எஸ்.பி.ஐ. வஙகியை நான் பாராட்டுகிறேன். இந்த விவகாரம் இதனுடன் முடித்து வைக்கப்படுகிறது. இது மீண்டும் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளரிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
உள்ளூர் மொழியில் பேச முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்து உள்ளார். அப்போதுதான் மக்களை மதிப்பது ஆகும் என்றும் தெரிவித்து உள்ளார்.