Samsung Galaxy S24 5G விலையில் அதிரடி வீழ்ச்சி: பிளிப்கார்ட்டில் வாங்கலாம்

Samsung Galaxy S24 5G Offer On Flipkart: சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆப்பிள் போனுக்கு ஈடாக இதன் விற்பனை நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த எடை கொண்டது. மேலும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட்டில் Samsung Galaxy S24 5G விலை | Samsung Galaxy S24 5G price on Flipkart:
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) ஸ்மார்ட்போனில் ரூ.29,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் கூடுதலாக ரூ.2,550ஐயும் பெறலாம். அதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் கட்டணமில்லா EMI விருப்பத்திற்கான விருப்பங்களையும் பெறலாம்.

அதேபோல் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய சாதனங்களை விற்பதன் மூலம் கூடுதல் தள்ளுபடியை பெறலாம். அதன்படி பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டு அவற்றில் ரூ.31,300 கூடுதல் தள்ளுபடியை பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் ஆப்பர் நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி அம்சங்கள் | Samsung Galaxy S24 5G 5G specifications:
சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G), 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2,600 nits உச்ச பிரகாசத்துடன் கூடிய 6.2-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி Exynos 2400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 25W வயர்டு மற்றும் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மூலம் ஆதரிக்கப்படும் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு, Samsung Galaxy S24 5G 5G ஆனது OIS மற்றும் 8K வீடியோ பதிவுடன் கூடிய 50MP முதன்மை சென்சார், 12MP அல்ட்ராவைடு மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி12MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்பிற்காக IP68-சான்றளிக்கப்பட்டது மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 6.1இல் இயக்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.