India U19 Team : இந்திய சீனியர் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியும் இங்கிலாந்து செல்ல உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 50 ஓவர்கள் கொண்ட 5 ஒருநாள் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி விளையாடுகிறது. இந்த இந்திய அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஆயுஷ் மத்ரே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஓப்பனிங் விளையாடி வரும் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி-யும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடக்கிறது. அதன்பிறகு முதல் ஒருநாள் போட்டி ஜூன் 27 ஆம் தேதி ஹோவ் மைதானத்தில் தொடங்குகிறது. 5 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு இரண்டு மல்டிடே போட்டிகளிலும் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி விளையாட உள்ளது.
இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி போட்டி அட்டவணை
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மொத்தம் 16 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், 5 பிளேயர்கள் பேக்கப் பிளேயர்களாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடரின் இடையே எந்த பிளேயருக்காவது காயம் ஏற்பட்டால் ஸ்டாண்ட் பையில் இருக்கும் பிளேயர்கள் இந்திய 19 வயது அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மும்பை உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடியதால் கவனம் பெற்றவர் ஆயுஷ் மத்ரே. அதன்பிறகு மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்.
பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வரும் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 19 வயதுக்குட்பட்டோருக்கான கேப்டன் பொறுப்பை கொடுத்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூரியவன்ஷியும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு இப்போது 15 வயது மட்டுமே ஆகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த காரணத்தால் அவருக்கு நேரடியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் விரைவில் சீனியர் அணியிலும் இடம்பிடிக்கலாம்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U19 அணி
ஆயுஷ் மத்ரே (சி), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, எம் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (டபிள்யூ கே), ஆர் அம்ப்ரிஷ், கனிஷ்க், கிலன், ஹெனில் படேல், ஒய் குஹா, பிரணவ், முகமது எனான், ஆதித்ய சிங், அன்மோல் ராணா,
மேலும் படிங்க: ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!
மேலும் படிங்க: ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?