சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ரிசர்வ் வங்கி நகைக்கடனுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி உள்ளார், இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் அவரச தேவைக்கு தங்களிடம் சேமிப்பாக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகையை மட்டுமே நம்பியிருந்தார்கள். மேலும், அவற்றை வங்கியில் அடகு வைப்பதன் மூலம் தங்களின் அவரசத் தேவைகளை சமாளித்து வந்தார்கள். ஆனால், தங்கநகை அடகு வைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் […]