பணி காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விவரங்களை சமர்ப்பிக்க பள்​ளிக்​கல்​வித் துறை உத்தரவு

சென்னை: கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்குவதற்காக பணிக்காலத்தில் மறைந்த ஆசிரியர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இருக்கிறார்.

இந்த துறையின்கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 31-ம் தேதி வரை காலமான அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வுபெற்ற ஆசிியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் எவரின் பெயரும் விடுபடாதவாறு கையொப்பத்துடன் முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் அதற்கு முந்தைய மாதத்தில் காலமான அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.

இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.