மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு, 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்புப் பூஜையும் நடைபெற உள்ளது. பதிவு செய்யுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மிருத்யுஞ்ஜய ஹோமம்

ம்ருத்யு என்றால் யமன். ஈசன் மார்க்கண்டேயனைக் காக்க யமனை வென்றதால், அவரே மிருத்யுஞ்ஜயர் என்றானார். அப்போது ஈசனைத் துதித்து மார்க்கண்டேயர் பாடியதே மஹாமிருத்யுஞ்சய மந்திரம். உயிருக்குக் கவசமாக நிற்கும் இந்த மந்திரத்தால் சிவனைக் குறித்துச் செய்யப்படுவதே மிருத்யுஞ்ஜய ஹோமம்.

மஹாமிருத்யுஞ்ஜய மந்திரம், மிருத சஞ்ஜீவனி ஸூக்தம், இந்திராக்ஷீ சிவகவசம் உள்ளிட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களால் செய்யப்படும் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் ஈசனின் பரிபூரண கடாட்சத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டால் ஆயுள் கூடும்; ஆரோக்கியம் நிலைக்கும்; மரண பயம் அகலும். தரித்திரம் பீடை விலகும். இந்த ஹோமத்திலிருந்து வெளியாகும் தெய்வீகக் சக்திகள், சங்கல்பம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைக் காக்கும்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும் அன்பர்களுக்கும் இந்த ஹோமத்தால் உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்கிறார்கள். மேலும் இந்த ஹோமம் அகால மரணத்தைத் தடுக்கும்; விபத்துக்களில் இருந்து காக்கும்; எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும். கண் திரிஷ்டி, தீய செய்வினைகள் யாவும் விலக செய்யும். இதனால் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிறப்பு மிக்க மஹாமிருத்யுஞ்சய ஹோமம் சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள மேலக்கோட்டையூரில் உள்ள ஸ்ரீமேகாம்பிகை சமேத ஸ்ரீமேகநாதர் ஆலயத்தில் மாதம்தோறும் அமாவாசை நாளில் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே சக்தி விகடன் வாசகர்கள் நலமும் வளமும் பெற இந்த சிறப்பு ஹோமத்தை இந்த ஆலயத்தில் நடத்த உள்ளோம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இது ராவணன் வழிபட்ட மேற்கு நோக்கிய ஆலயம். அம்பிகை மேகாம்பிகை பிள்ளை வரம் தரும் தயாபரி என்கிறார்கள். இது வருணன் வழிபட்ட சிறப்பு பரிகாரத் தலம். இங்கு மேகநாதன் வழிபட்டு மிருத்யுஞ்சய ஹோமம் செய்ததால் சுவாமியும் மேகநாதர் என்ற திருநாமம் கொண்டார். ஆயுள் அதிகரிக்கும் சிறப்பான தலமிது. இங்கு மட்டுமே வாசுகி நர்த்தனர் எனும் சிறப்பு வடிவில் ஈசன், வாசுகி பாம்பின் மீது ஆடும் திருக்கோலம் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் ஆரோக்கியம் கூடும் என்பது அனைவரின் நம்பிக்கை. இங்கு பிரதோஷ நாள்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்

இந்த மகிமை நிறைந்த தலத்தில் வரும் 26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்! 12 ராசிக்கும் தனித்தனியாக சிறப்பு வழிபாடுகள் செய்து பூஜைகளும் நடைபெறும் என்பதும் சிறப்பு. மேலும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாவிதமான பாதிப்பிலிருந்தும் காக்கப்படுகிறார்கள்.

QR CODE FOR MAHAMIRUTHYUNJAYA HOMAM:

qr code for miruthyunjaya homam

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.