2025 ஐபிஎல் தொடரின் 63வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. கிட்டத்தட்ட இந்த போட்டி ஒரு நாக் அவுட் போட்டி போல்தான் கருதப்பட்டது. மும்பை அணியை பெறுத்தவரை மீதமுள்ள போட்டிகளில் ஒன்றை வென்றால் கூட பிளே ஆஃப்புக்கு சொன்றுவிடலாம் என்ற நிலை தான் இருந்து. ஆனால் டெல்லி அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றால்தான் அவர்களால் பிளே ஆஃப் செல்ல முடியும். இச்சூழலில் நேற்றைய போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்களை விளாசியது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி மும்பை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்தது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதவாது #Umpireindians என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்கின்றனர்.
இதற்கு ரசிகர்கள் மூன்று காரணங்களை கூறுகின்றனர். அதாவது நடுவர் மூன்று முறை டெல்லி அணிக்கு எதிராக தவறான முடிவை கூறியதாக கூறி வருகின்றனர். டெல்லி அணியின் வீரர் விப்ராஜ் நிகம் மிட்செல் சாட்னர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் மிட்செல் சாட்னர் வீசிய பந்து நோ பால் என்று கூறுகின்றனர். அதேபோல் விப்ராஜ் நிகம் அடித்த ஒரு பந்து சிக்சர் சென்றதாகவும் அதனை நடுவர் ஃபோர் என கூறியதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேபோல் டெல்லி அணியின் மற்றொரு வீரர் அபிஷேக் போரல், வில் ஜாக்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதாவது வில் ஜாக்ஸ் வீசிய பந்தை விக்கெட்கீப்பர் ரியான் ரிக்கில்டன் பிடித்து ஸ்டம்பிங் செய்தார். அது அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அபிஷேக் போரலின் கால் கிரீஸ்க்குள் தான் இருந்தது என்றும் இதனை எப்படி அம்பயர் அவுட் கொடுத்தார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பழைய சீசன்களில் நடந்ததையும் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷானின் அவுட் விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!
மேலும் படிங்க: ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?