சென்னை ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடப்போவதாக அறிவித்துள்ளார் அண்மையில் சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு, :என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம். […]
