ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் யூசர்களுக்கு குட்நியூஸ்.. ஸ்பேம் கால் நச்சரிப்புக்கு முடிவு..!!

how to stop spam Calls ; ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் என எல்லா மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் தொந்தரவாக நினைப்பது ஸ்பேம் கால்கள் மற்றும் மார்க்கெட்டிங் கால்கள் தான். இந்தியாவில் பல மொபைல் யூசர்கள் நாள்தோறும் தொடர்ச்சியான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் விளம்பர செய்திகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கும் இடையூறாக இருக்கலாம். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த சிக்கலைச் சமாளிக்க முயற்சித்த போதிலும், சந்தைப்படுத்துபவர்கள் தொடர்ந்து அதில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொபைல் பயனர்களுக்கு தொடர்ச்சியான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் விளம்பரச் செய்திகள் வருவது தினசரி தலைவலியாக மாறியுள்ளது. புதிய கிரெடிட் கார்டுக்கான சலுகையாக இருந்தாலும், காப்பீட்டை விற்க முயற்சிக்கும் தெரியாத எண்ணாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒருபோதும் கேட்காத கடன் திட்டமாக இருந்தாலும், மொபைல் அழைப்புகளாக வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு எரிச்சலாகவும், நச்சரிப்பாகவும் இருக்கிறது இந்த அழைப்புகள். அதுவும் மிகவும் பிஸியாக இருக்கும் நேரத்தில் இந்த அழைப்புகள் வந்து தலைவலியை ஏற்படுத்தும். TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) சிக்கலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

அதேநேரத்தில், மார்க்கெடிங் துறையினர் எப்போதும் போல புதிய வழிகளைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இப்போது உங்களுக்கான நல்ல செய்தி என்ன தெரியுமா? நீங்கள் இனி அத்தகைய அழைப்புகளை சமாளிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஜியோ, ஏர்டெல், விஐபி அல்லது பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், இந்த தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஒரேயடியாகத் தடுக்க விரைவான மற்றும் நம்பகமான வழி உள்ளது. உங்கள் மொபைல் செட்டிங்ஸில் தொந்தரவு செய்ய வேண்டாம் (டிஎன்டி) சேவையை செயல்படுத்துவதன் மூலம், இந்த அழைப்புகளுக்கு என்டு கார்டு போட முடியும். இது எளிமையானது, இலவசம்.

அனைத்து நெட்வொர்க் யூசர்களும் எஸ்எம்எஸ் வழியாக டிஎன்டியை எவ்வாறு இயக்குவது?

டிஎன்டியை செயல்படுத்துவதற்கான எளிதான வழி ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதாகும். START 0 என டைப் செய்து உங்கள் மொபைலில் இருந்து 1909 க்கு அனுப்பவும். விரைவில் உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும், மேலும் சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு சேவை செயல்படுத்தப்படும்.

ஏர்டெல் பயனர்களுக்கு

– ஏர்டெல் தேங்க்ஸ் செயலியைத் திறக்கவும்
– More அல்லது Services என்பதைத் கிளிக் செய்யவும்
– DND பிரிவைக் கண்டறிய ஸ்கிரால் செய்யவும்
– நீங்கள் தடுக்க விரும்பும் அழைப்புகள் மற்றும் செய்திகளின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்

ஜியோ பயனர்களுக்கு

– My Jio செயலியைத் திறந்து மெனுவை கிளிக் செய்யவும்
– Settings > Service Settings என்பதற்குச் செல்லவும்
– Do Not Disturb  என்பதைக் கண்டுபிடித்து செயல்படுத்தவும்

வி (வோடாபோன்-ஐடியா) பயனர்களுக்கு

– விஐ செயலியைத் ஓபன் செய்யவும்
–  அதில் மெனுவைத் திறக்கவும்
–  ஆப்சனில் உள்ள Do Not Disturb ஆப்சனை ஆக்டிவேட் செய்யவும்

இதன் மூலம் உங்களுக்கு வரும் ஸ்பேம் மற்றும் மார்க்கெட்டிங் அழைப்புகளை ஈஸியாக தடுக்கலாம்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.