ரிஷப் பண்டை அவமானப்படுத்திய கில்? கடுப்பான ரசிகர்கள்.. என்ன நடந்தது?

2025 ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று (மே 22) மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 235 ரன்களை அடித்தது. 

அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 202 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டி முடிந்த உடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் லக்னோ அணியின் வீரர்களுக்கு கை குலுக்கி சென்றார். 

அப்போது ரிஷப் பண்ட் சுப்மன் கில் அருகே வந்து ஏதோ கூற முற்பட்டார். ஆனால் கில் பண்ட்டுக்கு சம்பிரதாயமாக கை குலுக்கிவிட்டு சென்றார். அவர் ரிஷப் பண்ட் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் சுப்மன் கில் ரிஷப் பண்ட்டை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட்தான் சுப்மன் கில்லை விட மூத்த வீரர். அப்படி இருக்க கில் இப்படியான ஒரு செயலை செய்தது ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. கில் அல்லது பண்ட்டை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக கேப்டன் பதவி கில்லுக்கு தான் அளிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை சுப்மன் கில்லை கண்டுக்கொள்ளாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நாளை (மே 24) இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: ஐபிஎல் அணியின் ஓனர்களை ஏமாற்றிய 3 பிளேயர்கள், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காது..!!

மேலும் படிங்க: ஐபிஎல் 2025க்கு பிறகு கழட்டிவிடப்படும் 7 வீரர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.