ஓங்கோல்: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாட்டிசெர்லமாடு எனும் கிராமத்துக்கு அருகில் நேற்று காலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் பாபட்லா மாவட்டம், ஸ்டுவர்டிபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும், கர்னூல் அருகே உள்ள மகாநந்தி கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கினர். இது தொடர்பாக கித்தலூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.