டெல்லி: பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 5 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் […]