CSK-க்கு ஆறுதல் வெற்றி… குதூகலத்தில் RCB ரசிகர்கள் – சிக்கலில் GT

IPL 2025 GT vs CSK: ஐபிஎல் 2025 தொடரின் 67வது லீக் போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 25)  நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்தை செய்தன. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடாவுக்கு பதில் ஜெரால்டு கோட்ஸி விளையாடினார். சிஎஸ்கேவை பொறுத்தவரை அஸ்வினுக்கு பதில் தீபக் கூடா விளையாடினார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ஆயுஷ் மாத்ரே வழக்கம் போல் அருமையான தொடக்கத்தை அளித்தார். குறிப்பாக அர்ஷித் கான் வீசிய 2வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 28 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும், பிரசித் கிருஷ்ணா வீசிய 4வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே மாதிரி ஆட்டமிழந்தார். 

அவர் 17 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் உட்பட 34 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து டெவன் கான்வே உடன் இணைந்து உர்வில் பட்டேலும் அதிரடியாக விளையாடினார். உர்வில் படேல் 19 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 38 ரன்களுடன் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

4வது வீரராக வந்த சுபம் தூபே 8 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைசதம் அடித்திருந்த டெவன் கான்வேவும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்திருந்தார்.

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரேவிஸ் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியை பெரிய இலக்குக்கு கொண்டு சென்றனர். பிரேவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 230 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 

பிரேவிஸ் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 57 ரன்களை அடித்திருந்தார். ரவீந்திர ஜடேஜா 18 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 21 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பிரசித் 2 விக்கெட்டுகளையும், ரஷித், சாய் கிஷோர், ஷாருக் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.