டெல்லி அணி கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டித் தூக்கும் சென்னை அணி!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அக்சர் படேலின் தலைமையில் ஐபிஎல் 2025-ல் தொடக்கம் சிறப்பாக இருந்தது.  முதலில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தனர். 14 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி பெற்று 6 பொட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணி சில வீரர்களை கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்கை டெல்லி கேபிட்டல்ஸ் அணி விடுவித்தது. ஆனால் மீண்டும் ஆர்டிஎம் பயன்படுத்தி ஒன்பது கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் இந்த தொகையை ஈடுகட்டும் அளவிற்கு ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் பெர்பாமன்ஸ் இல்லை. ஐபிஎல் 2025ல் மொத்தமே 55 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இவரது மோசமான பார்ம் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி கழட்டி விடலாம்.

முகேஷ் குமார்

டெல்லி அணிக்காக விளையாடிய முகேஷ் குமாரை மெகா இடத்தில் விடுவித்தது அணி நிர்வாகம். ஆனால் மீண்டும் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி எட்டு கோடிக்கு எடுத்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு முகேஷ் குமார் இந்த சீசனில் பந்து வீசவில்லை. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 12 விக்கெடுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி வருகிறார். இதனால் அடுத்த சீசனில் இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி கழட்டி விட அதிக வாய்ப்புள்ளது.

துஷ்மந்த சமீரா

ஸ்ரீலங்கா அணியை சேர்ந்த துஷ்மந்த சமீராவை 75 லட்சத்திற்கு தக்க வைத்துக் கொண்டது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. ஆனால் இந்த சீசனில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். அதில் மூன்று விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு இவரிடம் இருந்து விக்கெட்கள் மற்றும் ரன்கள் கிடைக்கவில்லை என்பதால் இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி கழட்டிவிட அதிகமாக வாய்ப்பு உள்ளது. சமீரா ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் இதுவரை 13 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

ஃபாஃப் டு பிளெசிஸ்

ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸை டெல்லி கேபிட்டல்ஸ் அணி இரண்டு கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 40 வயதாகும் கேபிட்டல்ஸ் பிட் ஆக இருந்தாலும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார். மேலும் அவருக்கு அடிக்கடி காயமும் ஏற்படுகிறது. இந்த சீசனில் இதுவரை 202 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். எனவே இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.