பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ஸ்லோவாக்கியாவின் ரெபேக்கா ஷ்ரம்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரெபேக்கா ஷ்ரம்கோவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), அர்ஜெண்டினாவின் ஜூலியா ரீரா உடன் மோதினார். இந்த போட்டியில் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜூலியா ரீராவை வீழ்த்திய ரைபகினா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.