GT: குஜராத் டைட்டன்ஸ் வெளியேற்றும் 3 வீரர்கள்… உற்றுநோக்கும் சிஎஸ்கே?!

Gujarat Titans: குஜராத் அணிக்கு இந்த சீசனில் (IPL 2025) 14 லீக் போட்டிகளில் 5 தோல்விகளையே சந்தித்திருக்கிறது. 9 வெற்றிகள் மூலம் தற்போதுவரை அந்த அணிதான் முதலிடத்தில் உள்ளது.

Gujarat Titans: கடைசியில் சறுக்கிய குஜராத்

ஆனால், இன்றைய மும்பை – பஞ்சாப் (PBKS vs MI) போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அவர் முதலிடத்திற்கு வந்துவிடுவார்கள். குஜராத் 2வது இடத்திற்கு தள்ளப்படும். ஒருவேளை நாளைய போட்டியில் லக்னோவை ஆர்சிபி (RCB vs LSG) வீழ்த்தினால் குஜராத் 3வது இடத்திற்கு தள்ளப்படும். 

நேற்று சிஎஸ்கேவுக்கு எதிராக 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து நெட் ரன்ரேட் அடி வாங்கிவிட்டது. லக்னோவுக்கு எதிராகவும் மோசமான தோல்வி. ராஜஸ்தான் உடனான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி குஜராத்தின் பந்துவீச்சுக்கு எதிராகதான் 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். குஜராத்துக்கு அவர்களின் டாப் ஆர்டர் மட்டுமே பிளே ஆப் வரை கொண்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் சிறப்பாக இருந்து பந்துவீச்சு இடைப்பட்ட பகுதியில் சொதப்பியிருக்கிறது.

Gujarat Titans: குஜராத் விடுவிக்கும் 3 வீரர்கள் 

இதனால், அடுத்த சீசனில் இன்னும் பலமான அணியை கட்டமைக்க ஆஷிஷ் நெஹ்ரா திட்டமிடுவார் எனலாம். அந்த வகையில், அவர் இந்த சீசனில் பயன்படுத்தாத இந்த 3 வீரர்களை விடுவித்துவிட்டு வேறு வீரர்களை ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் வாங்க திட்டமிடுவார் எனலாம். குஜராத் டைட்டன்ஸ் அணி கழட்டிவிடப்போகும் அந்த 3 வீர்ரகளை இங்கு காணலாம். 

1. குமார் குஷாக்ரா

குமார் குஷாக்ரா (Kumar Kushagra) டெல்லி அணியில் இருந்தார். இவரை ரூ.65 லட்சம் கொடுத்து குஜராத் இந்த மெகா ஏலத்தில் எடுத்தது. ஜாஸ் பட்லருக்கு பேக் அப்பாக இவர் இருந்தார். இவருக்கு இந்த சீசனில் வாய்ப்பே கிடைக்கவில்லை. எதிர்வரும் போட்டிகளிலும் வாய்ப்பு குறைவு. இவரை குஜராத் வெளியேற்ற வாய்ப்புள்ளது. சிஎஸ்கே விக்கெட் கீப்பர் பேட்டராக கூட இவரை எடுக்கலாம். 

2. மஹிபால் லோம்ரோர்

ஷாருக் கான், ராகுல் தேவாட்டியா, ஜெயந்த் ராவத் என அதிரடி ஃபினிஷர்களை வைத்திருக்கும் குஜராத், லோம்ரோரை (Mahipal Lomror) வைத்திருப்பதில் அர்த்தமே இல்லை. இவருக்கும் இந்த சீசனில் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆர்சிபியில் கடந்தாண்டு 10 போட்டிகளில் விளையாடியிருந்தார். அப்படியிருக்க இவரை விடுவித்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை எடுக்க குஜராத் பிளான் போடும். இவரை ரூ.1.70 கோடிக்கு குஜராத் தூக்கியது. சிஎஸ்கேவின் நம்பர் 6 அதிரடி ஹிட்டர் இடத்திற்கும் இவர் சரியாக இருப்பார். 

3. குர்னூர் சிங் பிரார்

குஜராத்தில் இவருக்கு இந்த சீசன் வாய்ப்பே கிடைக்கவில்லை. குர்னூர் சிங் பிரார் (Gurnoor Singh Brar) ரூ.1.30 கோடிக்கு குஜராத் எடுத்தது. இந்த முறை கடைசியில் பந்துவீச்சு மோசமாக இருந்தபோது கூட இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதிவேகமாக வீசும் திறன் கொண்டவர். இருப்பினும் போதிய அனுபவம் இல்லை என்பதால் இவரை குஜராத் நிச்சயம் விடுவிக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.