இனி இன்டர்நெட் இல்லாமாலும் யுபிஐ பேமெண்ட் பண்ணலாம்! ரொம்ப சிம்பிள்

How to make UPI Payment Without Internet UPI Tips and Tricks: இன்றைய டிஜிட்டல் உலகில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் UPI தளங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். இந்த UPI மூலம் பணம் செலுத்துவது என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி மாறிவிட்டது. மளிகைக் கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை, நாம் அனைத்து இடங்களிலும் UPI ஐப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இல்லையென்றாலோ அல்லது நெட்வொர்க் மோசமாக இருந்தாலோ என்ன செய்வது? இனி கவலை இல்லாமல் அத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆம் இது போன்ற சூழ்நிலைகளில் யுபிஐ கட்டணங்களை ஆஃப்லைனிலும் செய்ய முடியும். இந்தப் பதிவில் ஆஃப்லைனில் எப்படி யுபிஐ பரிவர்த்தனை செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

பெரும்பாலான நேரங்களில் ஹோட்டல்களுக்கு செல்வது, டிக்கெட் பெறுவது என பல்வேறு விஷயங்களுக்காக பணம் செலவு செய்ய இருக்கையில், திடீரென நெட்வொர்க் வேகம் குறைந்துவிடும் அல்லது நெட்வொர்க் வேலை செய்யாமல் போய்விடும். இது போன்ற சூழ்நிலைகளில் இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்வதற்கான ஆப்ஷனை அரசாங்கம் தற்போது வழங்கியுள்ளது. இந்த ஆப்ஷன் இருப்பது பலருக்கும் தெரியாது. அதற்கு அதிகாரப்பூர்வ USSD (Unstructured Supplementary Service Data) கோடை பயன்படுத்த வேண்டும். அதாவது உங்கள் இருப்பைச் சரிபார்க்க ஒரு குறியீட்டை டயல் செய்வது போல, இது உங்கள் வழக்கமான மொபைல் நெட்வொர்க்கில் செயல்படும்.

இந்தச் சேவையை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தொடங்கி இருக்கிறது. ஆன்லைன் பரிவர்த்தனையை போலவே இதில் நீங்கள் பணத்தை அனுப்பலாம், அதேபோல் பணம் பெறலாம், பேலன்ஸ் சரி செய்யலாம், யுபிஐ பின் நம்பரை மாற்றி அமைக்கலாம்.

இணையம் இல்லாமல் UPI பணம் செலுத்துவது எப்படி?

1. *99# டயல் செய்யுங்கள் – முதலில் உங்கள் தொலைபேசியின் டயலரில் *99# டயல் செய்து அழைப்பை மேற்கொள்ளுங்கள். (உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும்.)

2. மொழியைத் தேர்ந்தெடுங்கள் – உங்கள் முன் ஒரு மெனு திறக்கும், அதில் நீங்கள் விரும்பும் மொழியை (தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்றவை) தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள். உங்கள் மொழியைத் தேர்வுசெய்க.

3. இதற்குப் பிறகு நீங்கள் பணம் அனுப்பு விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. பின்னர் பணம் செலுத்த UPI ஐடி, மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு எண்ணைத் தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுவீர்கள். 

5. இப்போது நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

6. தொகை – நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.

7. PIN ஐ உள்ளிடவும் – கட்டணத்தை உறுதிப்படுத்த UPI PIN ஐ உள்ளிடவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.