கவுதம் கம்பீரால் ஓய்வை அறிவித்த மற்றொரு வீரர்! இங். தொடருக்கு முன்பு திடீர் ஓய்வு!

ஐபிஎல் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில்,  சுப்மான் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சில இளைஞர்களும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஜூன் 20ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. தற்போது இந்திய ஏ அணி அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிங்க: IPL 2025: கம்மி சம்பளம், அதிக அதிரடி; மிரட்டிய இந்த 3 வீரர்கள் – யாருமே எதிர்பார்க்கல!

ஓய்வை அறிவித்த மற்றொரு வீரர்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த பிரியங்க் பஞ்சால் முதல் தரப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட பிறகு இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார். பிரியங்க் பஞ்சால்
இந்திய ஏ அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ரோகித் சர்மாவிற்கு பதிலாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றார் பிரியங்க் பஞ்சால். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் தரப் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் 35 வயதான பிரியங்க் பஞ்சால் 127 இன்னிங்ஸில், 45.18 ஆவரேஜில் 8856 ரன்கள் அடித்துள்ளார். இதில் 29 சதங்களும் 34 அரை சதங்களும் அடங்கும். 2016-17 ரஞ்சி டிராபி தொடரில் பிரியங்க் பஞ்சால் சிறப்பாக விளையாடி இருந்தார். அந்த சீசனில் மட்டும் 1310 ரன்கள் அடித்தார். அவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 314 நாட் அவுட் ஆகும். அந்த சீசனில் குஜராத் அணி வெற்றி பெறுவதற்கு இவரது பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. 2015-16 விஜய் ஹசாரே டிராபி, 2012-13 மற்றும் 2013-14 சையத் முஷ்டாக் அலி டிராபியில் குஜராத் அணி வெற்றி பெற உதவினார். தற்போது X தளத்தில் தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்துள்ளார்.

Over and out. Onto greener pastures now.  pic.twitter.com/5uMiZVprql

— Priyank Panchal (@PKpanchal09) May 26, 2025

“என் அப்பா எனக்கு நீண்ட கால பலத்தை அளித்தார். அவர் எனக்குக் கொடுத்த ஆற்றலால், என் கனவுகளைத் தொடரவும், ஒப்பீட்டளவில் சிறிய நகரத்திலிருந்து எழுந்து ஒரு நாள் இந்தியத் தொப்பியை அணியத் துணியவும் அவர் என்னை ஊக்கப்படுத்திய விதத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் நீண்ட காலத்திற்கு முன்பு எங்களை விட்டுச் சென்றார். பிரியங்க் பஞ்சால் என்ற நான், முதல் வகுப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். இது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம். இது ஒரு வளமான தருணம். மேலும் இது எனக்கு மிகுந்த நன்றியை அளிக்கும் தருணம்.

என் அம்மாவுக்கும், என் தங்கைக்கும் நன்றி. நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் இதைச் செய்திருக்க முடியாது. என் மனைவிக்கும், அவள் குடும்பத்துக்கும் நன்றி. எனக்கு தோழமை, அன்பு, வாழ்க்கைக்கு ஒரு துணை கிடைத்தது. என்னைப் புரிந்துகொண்ட ஒருவர் – என் பலம், பலவீனங்கள், மகிழ்ச்சி, பயம், கனவுகள், மேலே உள்ள அனைத்தையும். அவளும் அவளுடைய மக்களும் எல்லா நேரங்களிலும் எனக்கு பாசத்தையும் உறுதியையும் அளித்துள்ளனர். மிக முக்கியமாக, என் ரசிகர்களே. உங்கள் முடிவில் இருந்து வரும் எல்லா செய்திகளையும் நான் எப்போதும் படிப்பேன். என்னை அறிந்த எவருக்கும், நான் எவ்வளவு பெரிய பைபிள் புத்தகம் என்பது தெரியும். ஒரு புத்தகத்தின் ஒரு அத்தியாயம் எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும், அடுத்தது எப்போதும் சிறப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. எனது புத்தகம் அதே மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிங்க: 2025 ஐபிஎல்லுக்கு பிறகு ஆர்சிபி கழட்டிவிடப்போகும் இந்த 4 வீரர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.