புதுடெல்லி: ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025″ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளாவிய சக்திவாய்ந்த தொழில்நுட்பம் கொண்ட 12 மையங்களில் பெங்களூருவும் அடங்கும். பெய்ஜிங், பாஸ்டன், லண்டன், நியூயார்க் மெட்ரோ, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, சியாட்டில், ஷாங்காய், சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் டொராண்டோ ஆகியவை பிற தொழில்நுட்ப சக்தி மையங்களாகும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறமைவாய்ந்த சந்தையாக பெங்களூரு உள்ளது. அதன் தொழில்நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் , பெங்களூரு நகரம் உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முக்கிய மையமாக மாறியுள்ளது.
28 யூனிகார்ன் நிறுவனங்களை உள்ளடக்கிய பெங்களூருவின் ஸ்டார்ட் அப் சூழல் சாதகமான வணிக விதிமுறை மற்றும் வலுவான நிறுவன ஆதரவிலிருந்து பெரிதும் பயனடைந்து வருவதாக அந்த அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.