டெல்லி இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், :இந்திய தொழில்துறை மீண்டும் ஒருமுறை அபாய சங்கை ஊதியுள்ளது. இம்முறை வாகன விற்பனைக்காக அது நடந்துள்ளது. 2018-19ல் மொத்த வாகன விற்பனையில் பயணிகள் கார்களின் பங்கு 65 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது 31 சதவீதமாக சரிந்துள்ளது. அதுவே விலையுயர்ந்த எஸ்யுவி மற்றும் பல்நோக்கு வாகனங்கள் விற்பனை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான […]
