ஐபிஎல் 2025 : குவாலிஃபையர் 1ல் வெற்றி பெறும் அணியே சாம்பியனாகும் – எப்படி தெரியுமா?

IPL 2025 Qualifier 1 Update: ஐபிஎல் 2025-ன் குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதாவது எந்த அணி வெற்றி பெற்றாலும், அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டி விளையாடும். தோல்வியடையும் அணி, நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இந்த சூழலில்குவாலிஃபையர் 1 குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025 சாம்பியன் யார்?

ஐபிஎல் வரலாற்றில் குவாலிஃபையர் 1ல் வெற்றி பெறும் அணியே அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. பிளேஆஃப் போட்டிகள் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் வந்ததிலிருந்து, குவாலிஃபையர்-1 இன் வெற்றியாளர் அணி பெரும்பாலான முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த முறையும், குவாலிஃபையர்-1 இன் வெற்றியாளர் அணி ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. ஐபிஎல் பிளேஆஃப்களின் வரலாற்றில், குவாலிஃபையர்-1ல் வென்ற அணி 14 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும், குவாலிஃபையர்-1ல் இரண்டு முறை தோற்ற பிறகும் இரண்டு முறையும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணியும் உள்ளது. இந்த சாதனை மும்பை இந்தியன்ஸ் வசமே உள்ளது.

ஐபிஎல் குவாலிஃபையர் அதிசயம்

ஐபிஎல் பிளேஆஃப்களின் வரலாற்றில், 2016 ஆம் ஆண்டில் எலிமினேட்டரில் விளையாடி கோப்பையை எட்டிய ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டுமே. குவாலிபையரில் நடந்திருக்கும் 14 போட்டிகளில் 10 முறை, லீக் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி குவாலிஃபையர்-1ஐ வென்றுள்ளது. அந்தவகையில் பார்க்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருப்பதால் குவாலிஃபையர் 1ஐ வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

பஞ்சாப், ஆர்சிபி : எந்த அணி வலிமையானது?

ஐபிஎல்லில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுவரை, இரு அணிகளுக்கும் இடையே நடந்த மொத்தம் 35 போட்டிகளில், பிபிகேஎஸ் 18 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் ஆர்சிபி 17 போட்டிகளில் வென்றுள்ளது. 

மேலும் படிங்க: Qualifier 1 PBKS vs RCB: மழை பெய்தால் எந்த அணிக்கு பாதிப்பு? முழு விவரம்!

மேலும் படிங்க: ரிஷப் பந்தை திட்டி தீர்த்த அஸ்வின்! என்ன நடந்தது? முழு விவரம்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.