2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்துள்ளது. 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சீசனில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தி வந்த அணி அணி, இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிக ரன்களை அடித்திருந்தார். அதற்கான ஆர்ஞ்ச் கேப்பையும் அவர் பெற்றார். சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணா ப்ரப்பில் கேப்பை வென்றார். இப்படி பல வீரர்கள் தங்களது திறமையை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெளிகாட்டி உள்ளனர். இந்த நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஆகாஷ் சோப்ரா ஒரு பிளேயிங் 11-ஐ தேர்வு செய்து இருக்கிறார். இதில் எந்த வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர் என்பதை பார்க்கலாம்.
தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சாய் சுதர்சன் இத்தொடரில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றவர். விராட் கோலி இந்த தொடரில் அபாரமாக விளையாடி உள்ளார். அவர் அரை சதம் அடித்த போதெல்லாம் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது.
மூன்றாவதாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் இடம் பிடித்திருக்கிறார். ஆகாஷ் சோப்ரா முதலில் ஹென்றிச் கிளாசனை சேர்பதா அல்லது பட்லரை சேர்பதா என்ற குழப்பத்தில் இருந்ததாகவும் பின்னர் பட்லர் குஜராத்தின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்ததால் அவரை தேர்வு செய்ததாக கூறினார். நான்காவதாக ஸ்ரேயாஸ் ஐயர், ஐந்தாவதாக சூர்யகுமார் யாதவ், ஆறாவதாக சிஎஸ்கே வீரர் பிரவீசையும் தேர்வு செய்துள்ளார்.
பந்து வீச்சில் முதலில் குர்னால் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பும்ரா, நூர் அகமது, ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை ஆகாஷ் சோப்ரா தனது சிறந்த பிளேயிங் 11ல் தேர்வு செய்து இருக்கிறார்.
மேலும் படிங்க: சின்னசாமி துயர சம்பவத்துக்கு விராட் கோலியின் ரியாக்ஷன் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
மேலும் படிங்க: ஆர்சிபி அணி மீது விசாரணை.. முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சர்ச்சை!