DIGIPIN: இந்திய அரசின் அதிநவீன டிஜிட்டல் முகவரி அமைப்பு, உங்கள் இருப்பிடத்தின் டிஜிட்டல் குறியீடு என்ன?

DigiPIN: இந்திய அரசு DIGIPIN எனப்படும் புதிய மற்றும் அதிநவீன டிஜிட்டல் முகவரி அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் துல்லியமான புவியியல் இருப்பிட முகவரியை வழங்கும் திறன் கொண்ட 10-எழுத்து எண்ணெழுத்து குறியீடாகும். இந்த புதிய அமைப்பு சுமார் 4×4 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய கிரிட்டை கவர் செய்கிறது. இதன் மூலம் இது பாரம்பரிய முகவரி அமைப்பு சீராக இல்லாத அல்லது அதிகம் அறியப்படாத பகுதிகளில் குறிப்பாக உதவியாக இருக்கும்.

DIGIPIN-ஐ உருவாக்கியது யார்?

DIGIPIN, இந்தியா போஸ்ட், ஐஐடி ஹைதராபாத் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது முற்றிலும் ஓப்பன் சோர்ஸ், புவிசார் குறியீடு மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய, அதாவது இன்டர்-ஆபரபிள் அமைப்பாகும். அதாவது, யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். மேலும் இது மற்ற அமைப்புகளுடனும் எளிதாக வேலை செய்கிறது. கடைசி மைல் விநியோகத்தை மேம்படுத்துதல், அவசரகால சேவைகளை (காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை போன்றவை) சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே டிஜிட்டல் தொடர்பை விரைவாகவும் துல்லியமாகவும் மாற்றுவது ஆகியவையே இதன் நோக்கம்.

DIGIPIN ஏன் அவசியம்?

DIGIPIN என்பது புதிய PIN குறியீடு அமைப்பு அல்ல, இது இந்தியாவின் தற்போதைய 6 இலக்க PIN குறியீடு அமைப்பின் மேம்படுத்தலாகும். பழைய அமைப்புடன் புவியியல் துல்லியத்தைச் சேர்ப்பதே இதன் நோக்கம். இந்த அமைப்பு நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிற்கும் நன்மை பயக்கும்.

DIGIPIN: இதன் நன்மைகள் என்ன?

• இ-காமர்ஸ் விநியோகங்களில் துல்லியமும், வேகமும் மேம்படும்
• அவசர சேவைகளுக்கான விரைவான அணுகலை வழங்கும்
• தொலைதூர மற்றும் முகவரி இல்லாத பகுதிகளுக்கும் சரியான அடையாளம் கிடைக்கும்.
• தனியுரிமையைப் பராமரிக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும் இல்லாமல் புவி இருப்பிடம் மட்டுமே சேமிக்கப்படுகிறது.

How To Find your DIGIPIN Code from your Mobile Phone?

மொபைலில் இருந்து உங்கள் DIGIPIN குறியீட்டை எவ்வாறு அறிவது?

உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து ஒரு இடத்தின் DIGIPIN ஐ அறிய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1. https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற வலைத்தளத்திற்கு செல்லவும் 

2. பிரவுசருக்கு உங்கள் இருப்பிடத்தை அணுக அனுமதிக்கவும்.

3. ‘I Consent’ என்பதைக் கிளிக் செய்து விதிமுறைகளை ஏற்கவும்.

4. உங்கள் தனித்துவமான DIGIPIN கீழ் வலது மூலையில் தெரியும்.

நீங்கள் விரும்பினால், அந்த போர்ட்டலில் இருப்பிட ஆயத்தொலைவுகளை (Location Coordinates) உள்ளிட்டு DIGIPIN ஐக் கண்டறியலாம், அல்லது DIGIPIN ஐ உள்ளிட்டு  அதன் இருப்பிடத்தைக் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.