உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

லார்ட்ஸ்,

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின.

இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்தாண்டு முழுவதும் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் எல்லாம் வெற்றி பெற்ற நிலையில், குறிப்பாக ஹோபர்ட் ஹாரிகேன்ஸ், ஆர்சிபி அணிகள் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அவர்களைப் போல தென்னாப்பிரிக்க அணியும் சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விவரம்:

உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி(வி.கீ), பேட் கம்மின்ஸ் (கே), மிட்சேல் ஸ்டார்க், நேதன் லியோன், ஜோஸ் ஹேசல்வுட்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.