MR.Consistent! ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் தூணாய் நிற்கும் ஸ்மித்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் புவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என கூறி அவர் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். 

இந்த நிலையில், கேப்டன் பவுமா நினைத்து போல் பந்தும் ஸ்விங் ஆனது. நல்ல தொடக்கமும் கிடைத்தது. ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 20 பந்துகளை உஸ்மான் கவாஜா எந்த ரன்னும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து கிரீனும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களத்தில் வந்த ஸ்டீவ் ஸ்மித் மார்னஸ் லபுசென்னுடன் கைகோர்த்து விளையாட தொடங்கினார். இந்த பார்ட்னர்ஷிப்பும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 30 ரன்களை மட்டுமே இந்த கூட்டணியால் சேர்க்க முடிந்தது. முதல் இரண்டு விக்கெட்களை ரபாடா வீழ்த்திய நிலையில், மூன்றாவது விக்கெட்டை மார்கோ யான்சன் வீழ்த்தினார். மார்னஸ் லபுசென் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனைத்தொடர்ந்து களத்திற்கு வந்த டிரவிஸ் ஹெட் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார் என நினைத்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் இருந்த ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு தூணாய் நின்று விக்கெட்டை காத்து ரன்களை சேர்த்து வருகிறார். 

ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் 

அரைசதம் கடந்து தற்போது 60 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இந்த அரைசதம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது 42வது அரைசதத்தை பூர்த்து செய்துள்ளார். அதேபோல் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இதுவரை 7 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை ஸ்மித் குவித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளார். அவர் 10 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 

MR.Consistent!

டெஸ்ட் போட்டி என்றாலே சில பெயர்கள் தான் நமக்கு தோன்றும். அதில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். அவரது பேட்டிங் ஸ்டைல், தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்கும் விதம் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமல்லாமல், அவரை அனைத்து நாட்டு மக்களும் ரசிப்பதுண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் விளையாடி அதிக சராசரியை கொண்டிருப்பவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். இதுவரை 117 போட்டிகளில் 207 இன்னிங்ஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 10336 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 57.1ஆக உள்ளது. இதில் 42 அரைசதங்கள் மற்றும் 36 சதங்கள் அடங்கும்.  

மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?

மேலும் படிங்க: குளவுஸை தூக்கி வீசிய அஸ்வின்! தக்க பதிலடி கொடுத்த TNPL – முக்கிய அப்டேட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.