மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர்: 12 மாவட்டங்களில் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்

மேட்டூர்: ​கா​விரி டெல்டா பாசனத்​துக்​காக, மேட்​டூர் அணையி​லிருந்து முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தண்​ணீரை திறந்து வைத்​தார்.

டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்​பாண்டு அணை​யில் போதிய தண்​ணீர் இருப்பு உள்​ள​தால், அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​திருந்​தது.

இதன்​படி, மேட்​டூர் அணை​யில் இருந்து நேற்று காலை 9.45 மணி​யள​வில் டெல்டா பாசனத்​துக்கு மு.க.ஸ்​டா​லின் தண்​ணீரை திறந்​து​வைத்​து, அணையி​லிருந்து சீறிப்​பாய்ந்து வெளி​யேறிய நீரில் மலர்​களைத் தூவி​னார். தொடர்ந்​து, டெல்டா மாவட்​டங்​களின் திட்​டப் பணி​கள் மற்​றும் சிறப்பு தூர்​வாரும் பணி​கள் குறித்த புகைப்​படக் கண்​காட்​சியை முதல்​வர் பார்​வை​யிட்​டார்.

மேட்​டூர் அணையி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் தண்​ணீர் மூலம் நாமக்​கல், கரூர், திருச்​சி,புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, கடலூர், அரியலூர் உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் ஏறத்​தாழ 17.32 லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் பாசன வசதி பெறும். குறுவை பாசனத்​துக்கு ஜூன் 12 முதல் செப்​டம்​பர் 15-ம் தேதி வரை​யும், சம்பா மற்​றும் தாளடி பாசனத்​துக்கு செப்.15 முதல் ஜனவரி 28-ம் தேதி வரை​யிலும் தண்​ணீர் விடப்​படும்.
நடப்​பாண்​டில் டெல்டா விவ​சா​யிகள் தண்​ணீரை சிக்​க​ன​மாகப் பயன்​படுத்​தி, நிலை​மை​கேற்ப தண்​ணீரை முறை​வைத்​துப் பயன்​படுத்​தி, அதிக அளவு மகசூல் பெற்​றுப் பயனடை​யு​மாறு முதல்​வர் ஸ்டா​லின் கேட்​டுக் கொண்​டார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் துரை​முரு​கன், எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், ராஜேந்​திரன், சிவசங்​கர், அன்​பில் மகேஷ் பொய்​யாமொழி, மதிவேந்​தன், எம்​.பி-க்​கள் டி.எம்​.செல்​வகணப​தி, மணி, மலை​யரசன்,எம்​எல்ஏ சதாசிவம், மாவட்டஆட்​சி​யர் பிருந்தா தேவி, நீர்​வளத்துறைச் செயலர் ஜெய​காந்​தன் மற்​றும் அதி​காரி​கள், உள்​ளாட்சி அமைப்​புப் பிர​தி​நி​தி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

மேட்​டூர் அணை​யில் நேற்று காலை நீர்​வரத்து விநாடிக்கு 6,339 கனஅடி​யாக​வும், நீர்​மட்​டம் 114.91 அடி​யாக​வும், நீர் இருப்பு 85.58 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. பாசனத்​துக்கு தொடக்​கத்​தில் விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​பட்​டது. இது படிப்​படி​யாக 10,000 கனஅடி வரை அதி​கரிக்​கப்​பட்​டது. அணை​யில் இருந்து முழு அளவில் தண்​ணீர் திறக்​கப்​பட்​ட​தால் சுரங்க மின் நிலை​யம், அணை மின் நிலை​யம் மற்​றும் 7 கதவணை​கள் மூலம்​ 460 மெகா​வாட்​ மின்​சா​ரம்​ உற்​பத்​தி செய்​யப்​படும்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.