'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' – கருணாஸ் | Vikatan Cinema Awards

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில்...
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில்…

2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை ‘போகும் இடம் வெகு தூரமில்லை’ படத்துக்காகப் பெற்றார் நடிகர் கருணாஸ். இந்த விருதை இயக்குநர் லிங்குசாமி வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட கருணாஸ், ” இயக்குநர் மைக்கேலுக்கு நன்றி. 163 படங்களில் நடித்திருக்கிறேன். ‘நந்தா’ படத்தின் மூலம் இயக்குநர் பாலா என்னை அறிமுகப்படுத்தினார். இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன். தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு விருது கிடைக்கவில்லை.

கருணாஸ்

25 வருடங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடித்ததால், இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நான் கானா பாடகராக இருந்தபோதிலிருந்தே விகடனில் என் பெயர் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். கலை மட்டும்தான் என்னுடைய மூச்சு. என்னைச் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. அது பிரச்னை இல்லை. இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.