இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்க ஒரு லேப்டாப், வைஃபை வசதி போதும்! – வழிகாட்டும் நிகழ்ச்சி

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வீட்டிலிருந்தே அமேசான் விற்பனை தளத்தில் பிசினஸ் தொடங்குவது பற்றிய நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. இ-காமர்ஸ் எக்ஸ்பெர்டும் நியூஜென்மேக்ஸ் நிறுவனருமான நிவேதா முரளிதரன் நடத்தும் ‘அமேசான் தமிழ் ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி  சென்னையில் நடைபெறும்.

முன் அனுபவமும் இல்லாமல்  அமேசானில் தொழில் தொடங்குவது எப்படி,  அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளைக் கண்டறிதல், சொந்த பிராண்டை உருவாக்குதல், நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்டவை குறித்து கற்றுக்கொடுக்கப்படும்.

மேலும் அமேசான் தொழில் தொடங்க தேவையான ஆவணங்கள், போட்டோ எடுத்தல், சப்ளையரை கண்டறிதல், 1000-க்கும் மேற்பட்ட பாசிட்டிவ் ரெவ்யூஸ் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும். ஒரு லேப்டாப் மற்றும் வைஃபை வசதியை மட்டும் வைத்து இ-காமர்ஸ் வணிகத்தைத் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.

முக்கிய உரைகள்:

சுய தொழில் தொடங்கி வாழ்வில் வெற்றி பெற்ற தைரோகேர் நிறுவனர் வேலுமணி, நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சி.கே. குமாரவேல், ஃபெமி 9 நிறுவனத்தின் உரிமையாளர் கோமதி, 9 ஸ்கின் இணை நிறுவனர் டெய்சி மோர்கன், டிவைன் ஃபுட்ஸ் நிறுவனர் கிரு மைக்காப்பிள்ளை, சின்னத்திரை தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், சேரன் அகாடமியின் நிறுவனர்
ஹுசைன் அகமது உள்ளிட்டப் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச உள்ளனர்.

சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள ஃபெதர்ஸ் ஹோட்டலில் வரும் ஜூன் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்துகொள்வோர் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவுக்கு இந்த லிங்கில் https://event.ecomcoach.in/amazon_startup_hackathon_tamil_event-1b க்ளிக் செய்யவும்.
தொடர்புக்கு:8248547915

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.