சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் விவோ நிறுவனத்தின் டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 அல்ட்ராம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்களின் வேரியன்ட்கள் அறிமுகமாகின. தற்போது டி4 மாடலில் ஒரு வேரியன்டான டி4 அல்ட்ரா அறிமுகமாகி உள்ளது.
T4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 9300+ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. IMX921 சென்சார் இந்த கேமராவில் உள்ளது
- 32 மெகாபிக்சல் உள்ளது முன்பக்கத்தில் உள்ள செல்ஃபி கேமரா
- 5,500mAh பேட்டரி
- 90 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- ரிவர்ஸ் சார்ஜிங் செய்யும் வசதியும் இதில் உள்ளது
- யுஎஸ்பி டைப்-சி
- 8ஜிபி / 12ஜிபி ரேம்
- 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை ரூ.37,999 முதல் ஆரம்பமாகிறது