அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும்போதே அவர்களது அன்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்று தந்தையர் தினம். தங்கள் வாழ்வில் என்றைக்குமான முன்னுதாரணமாக விளங்கும் தங்கள் தந்தையின் நினைவுகளை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் தனுஷ், தனது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் தனுஷ், “இன்று நான் இப்படி இருப்பதற்கு எனக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்திருக்கும் என் தந்தைக்கு நன்றி சொல்ல வார்த்தைகளால் முடியாது. என் அப்பாதான் என்னுடைய ஹீரோ. தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா” என்று பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த நெகிழ்ச்சியானப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…