சென்னை இஸ்ரோ வின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்த்தாளர் நெல்லை சு முத்து மரணத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், ”இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் […]
