ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் முதல் 100 இடங்களில் இடம்பிடித்ததுள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) QS தரவரிசையில் 77வது இடத்தில் உள்ளது. UK, US, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைக்க UGC கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. […]
