வழக்கமான மாடலில் இருந்து கூடுதலான பாடி கிராபிக்ஸ், ஆக்செரீஸ் உடன் ரூ.21,000 வரை விலை உயர்த்தப்பட்டு சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசனின் விலை ரூ.9.57 லட்சம் முதல் ரூ. 10.36 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சி3 ஸ்போர்ட்ஸ் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரங்கள் பின் வருமாறு;-
- வெள்ளை மற்றும் சிவப்பு என இரு நிறங்களிலும் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
- பாடி ஸ்டிக்கரிங் ஆனது பானெட், ரூஃப் மற்றும் பக்கவாட்டு கதவுகளில் உள்ளது.
- இன்டீரியரில் ஆம்பியன்ட் லைட்டிங், ஸ்போர்ட்டிவான பெடல்
- இருக்கை கவரில் ஸ்போர்ட் பேட்ஜிங், தரை விரிப்புகள்
- கூடுதலாக டெக் ஆப்ஷனல் கிட் ரூ.15,000 கட்டணத்தில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டேஸ்கேமரா வசதியும் உள்ளது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
- Citroen C3 Sports Shine Turbo DT MT – ₹ 9.57 லட்சம்
- Citroen C3 Sports Shine Turbo AT – ₹ 10.21 லட்சம்
- Citroen C3 Sports Shine Turbo DT AT – ₹ 10.36 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம்)