இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : இலவசமாக பார்க்கலாம் – வெளியான புதிய அறிவிப்பு

India vs England Live Streaming : இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளை ப்ரீ டிஷ்ஷில் டிடி சேனலில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிகளை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாமல் தொடருக்குச் செல்வதால், இது இந்திய அணிக்கு ஒரு புதிய சகாப்தம் தொடங்க உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 25 வயதான சுப்மான் கில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். கவுதம் கம்பீரின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்த கூட்டணி 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் மூன்று டெஸ்ட் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. 1971, 1986 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளன. இம்முறை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றால் நான்காவது முறையாகும். 

இந்த தொடர் இளம் இந்திய அணிக்கு பெரும் சோதனையாக இருக்கும். ஆனால் 2021ல் இதே இளம் படையை கொண்ட இந்திய அணி தான் கபாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பெற்றது. அப்போதிலிருந்து ரசிகர்கள் இளம் இந்திய அணி மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திரங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கு திரும்பி வருவதாலும், சாய் சுதர்சன் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற புதிய முகங்கள் அணிக்குள் வருவதாலும், இந்திய அணி வலுவாகவே இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் என எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு அட்டவணை

முதல் டெஸ்ட் – ஜூன் 20, ஹெடிங்லி, லீட்ஸ்
2வது டெஸ்ட் – ஜூலை 2, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
3வது டெஸ்ட் – ஜூலை 10, லார்ட்ஸ், லண்டன்
4வது டெஸ்ட் – ஜூலை 23, ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
5வது டெஸ்ட் – ஜூலை 31, தி ஓவல், லண்டன்

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கும் உள்ளூர் நேரப்படி காலை 11:00 மணிக்கும் தொடங்கும்.

ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்

நேரடி டிவி: சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், டிடி சேனல் – ப்ரீ டிஷ்,
லைவ் ஸ்ட்ரீமிங்: ஜியோ ஹாட்ஸ்டார்

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2025: 

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (C), அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் (WK), KL ராகுல் (WK), துருவ் ஜூரெல் (WK), முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா

இங்கிலாந்து டெஸ்ட் அணி (முதல் டெஸ்ட்): பென் ஸ்டோக்ஸ் (C), பென் டக்கெட், ஜோ ரூட், ஜாக் கிராலி, ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், கிறிஸ் வோக்ஸ், ஓலி போப் (WK), ஜேமி ஸ்மித் (WK), சாமுவேல் ஜேம்ஸ் குக், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர், ஜோஷ் டங் மற்றும் ஜேமி ஓவர்டன்

மேலும் படிங்க: 2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?

மேலும் படிங்க: முகமது அசாருதீன் முதல் மனைவி யார்? விவாகரத்துக்குப் பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.