England vs India 1st Test, Toss and Playing XI Updates: இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரை விளையாட உள்ளன. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இன்று (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
ENG vs IND Toss Updates: டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ்
இன்றைய போட்டியின் டாஸை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்றார். அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெரும்பாலும் ஹெடிங்லி மைதானத்தின் ஆடுகள சூழல் முதல் நாள் மட்டுமே பந்துவீச்சுக்கு பெரிய சாதகத்தை அளிக்கும். அடுத்த 4 நாள்கள் வெயில் வரும்போது ஆடுகளத்தில் ஈரப்பதம் முற்றிலும் வெளியேறும்போது, அது பேட்டிங்கிற்கு சாதகமானதாக மாறும். எனவேதான் டாஸ் வென்ற உடன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ENG vs IND: இந்திய ஓப்பனர்கள் பொறுமை காட்ட வேண்டும்…
சுப்மான் கில்லும் தான் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன் என கூறியிருந்தார். அப்படியிருக்க, தற்போது இந்த இளம் இந்திய அணிக்கு ஆரம்பமே நெருக்கடி காத்திருக்கிறது. பந்து முதல் ஒரு மணி நேரம் நன்கு ஸ்விங்காக வாய்ப்பிருக்கிறது. அங்கு மேகக்கூட்டத்துடனும் காணப்படுகிறது. அப்படியிருக்க இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மிக மிக பொறுமையாக விளையாட வேண்டியது அவசியம். ஓபனிங் ஜோடியாக எதிர்பார்த்தது போல் ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் களமிறங்குவார்கள். இவர்கள் இன்று பொறுப்புடன் விளையாட வேண்டும்.
ENG vs IND: டெஸ்டில் சாய் சுதர்சன் அறிமுகம்
அதேநேரத்தில், அனைவரும் எதிர்பார்த்ததுபோல் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது. சாய் சுதர்சன் செதேஷ்வர் புஜாராவின் கையால் இந்திய அணியின் டெஸ்ட் தொப்பியை பெற்றுக்கொண்டார். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 317வது வீரர் சாய் சுதர்சன் ஆவார். சாய் சுதர்சன் புஜாராவை போன்று நம்பர் 3 இடத்தில் இறங்குவார். கில், பண்ட், கருண் நாயர் ஆகியோர் முறையே 4வது, 5வது, 6வது இடத்தில் இறங்குகிறார்கள்.
ENG vs IND: இந்திய அணியின் பந்துவீச்சு படை
4 வேகப்பந்துவீச்சாளர், 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற பார்மட்டில் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. ஷர்துல் தாக்கூர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அணியில் இடம்பெற்றுள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. பும்ரா முதல் போட்டியில் விளையாடுகிறார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்துவீச்சு படையில் பலம் சேர்ப்பார்கள். இங்கிலாந்து அணி கடந்த புதன்கிழமை (ஜூன் 18) அன்றே பிளேயிங் லெவனை அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ENG vs IND: இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர்