புனே ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர். அந்த விமானம் மகாராஷ்டிர வான்பரப்பில் நுழைந்து நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. எனவே விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக புனே விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. […]