'ரஜினி சார், சிவகார்த்திகேயன் அண்ணா எங்க படங்களுக்கும் ஆதரவு கொடுங்க'- திருநங்கை ஜீவா சுப்ரமணியம்

இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், ’96’ படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘குட் டே’ ( Good Day).

காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட், ஜீவா சுப்ரமணியம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 21) நடைபெற்றது. 

Good Day movie
Good Day movie

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திருநங்கை ஜீவா சுப்ரமணியம், இந்தப் படத்தில் நான் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். சேலை மற்றும் சுடிதாரில் மட்டும் நடிக்கிறீர்கள் என்று நிறைய பேர் சொல்கிறீர்கள்.

எனக்கு சேலை என்றால் ரொம்ப பிடிக்கும். என் பெண்மையை உணர்ந்தபோது நான் அணிந்த உடை சேலைதான். அதனால் எங்கு சென்றாலும் நான் சேலைதான் அணிந்து செல்வேன். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க முடியும். வாய்ப்புக் கொடுத்து பாருங்கள். சிவகார்த்திகேயன் அண்ணா, ரஜினி சார் வெளியாகும் படங்கள் எல்லாவற்றையும் பார்த்து பாராட்டுகிறீர்கள்.

ஜீவா சுப்ரமணியம்
ஜீவா சுப்ரமணியம்

அதேபோல நாங்கள் நடிக்கும் படங்களையும் பாராட்டினால் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் அன்பு மற்றும் சப்போர்ட் மிகப்பெரியதாக இருக்கும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. எங்களுடைய படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுடிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.