365 நாட்கள் ரீசார்ஜ்.. ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய், கலக்கும் ஜியோ, ஏர்டெல், விஐ

BSNL, VI And Jio Yearly Recharge Plans Details: சும்மா சும்மா ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா? அப்போ BSNL, Jio மற்றும் Vi ஆகிய மூன்று நிறுவனங்களும் ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம், பயனர்களும் OTT இன் பலனையும் பெறுவார்கள்.

ஜியோவின் ரூ.3,599 ப்ரீபெய்ட் திட்டம்
இப்போது நாம் பார்க்க இருப்பது ஜியோ ரூ 3599 வருடாந்திர திட்டம் (Jio Rs 3599 Annual Plan) தான். 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கான மாத செலவு ரூ.299ஆக ஆகும். இந்த விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், கிளவுட் டேட்டாவை கொடுக்கிறது. இது தவிர வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவை பெறலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்த நாளொன்றுக்கு கிடைக்கும் டேட்டாவை முழுவதும் முடித்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இதனுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோடிவி (JioTV) சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இது தவிர, பயனர்கள் தினமும் 100 SMS அனுப்பலாம். இந்த ரீசார்ஜில் பயனர்களுக்கு JioHotstar சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது.

வியின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், நிறுவனம் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் மொத்தம் 3600 SMS சேவையை வழங்குகிறது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 24GB டேட்டாவைப் பெறுவார்கள். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, பயனர்கள் ஒரு MBக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

BSNL இன் ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL இன் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், பயனர்கள் 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அழைப்புகளுக்கு 300 நிமிடங்கள், 3GB டேட்டா மற்றும் 30 SMS சேவையைப் பெறுவார்கள். காலிங் நிமிடங்கள் தீர்ந்த பிறகு, பயனர்கள் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.1 மற்றும் STDக்கு நிமிடத்திற்கு ரூ.1.3 கட்டணம் செலுத்த வேண்டும். இது 12 மாதத்திற்கும் கிடைக்கும் படி, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் வாய்ஸ் கால்ஸ் நன்மையை தனித்துவமாக வடிவமைத்துள்ளது. அதேபோல், இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா (data) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் இதே போல ஒவ்வொரு மாதமும் சில குறிப்பிட்ட அளவில், மாதம் தவறாமல் வழங்கப்படும். இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 3GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.