திருச்சி திருச்சி விமான நிலையம் பயணிகலீ கையாள்வதில் முதலிடம் பிடித்துள்ளது தினந்தோறும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் அதிக அளவிலான பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. […]
