Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது. இதற்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பார்க்கப்படுகிறார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடித்த 465 ரன்களில் பிரஷித் கிருஷ்ணா மட்டும் 128 ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். அவர் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் 20 ஓவர்களுக்கு 128 ரன்கள் என்பது அதிகமானது. ஒரு ஓவருக்கு 6.5 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் ரன்களை வாரி வழங்கி உள்ளார். 

இவரை அடுத்து முகமது சீராஜ் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் அவரது எக்கானமி 5க்கும் குறைவாக இருப்பதால், அவர் தப்பித்தார். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலராக பிரஷித் கிருஷ்ணா ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தி உள்ளார். முன்னதாக 2014ஆம் ஆண்டு வருண் ஆரோன் ஒரு ஓவருக்கு 5.91 என்ற ரன் விகிதத்தில் விட்டுக்கொடுத்திருந்தார். தற்போது பிரஷித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளார். 

இன்று(ஜூன் 24) இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி நாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்களை எடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் 350 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபக்கம் இந்திய அணி 10 விக்கெட்களை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இச்சூழலில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பிரஷித் கிருஷ்ணா, இரண்டாவது இன்னிங்ஸில் ரன்களையும் கட்டுப்படுத்தி விக்கெட்களையும் எடுக்க வேண்டும். 

அப்படி செய்தால் மாட்மே பிரஷித் கிருஷ்ணாவுக்கு வரும் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தால், அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. இங்கிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா, சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன் – முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு!

மேலும் படிங்க: Ind vs Eng 1st Test: இன்று கடைசி நாள்.. என்ன நடக்கும்? வெல்லப்போவது யார்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.