நீதிபதி தேர்வுல தமிழ்நாடு அளவுல 5 வது இடம் புடிச்சிருக்கேன்ப்பா! – மகளின் பரிசு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பேரன்புள்ள அப்பாவுக்கு,

உங்கள் பேரன்பை மீயதிகம் பெற்ற மகள் இங்கு நலம். எல்லாரும் நல்லா இருக்கீங்கள ப்பா,

அன்னைக்கு நீங்க அம்மாவ திட்டுன கோவத்துல பேசாம இருந்துட்டேன் ப்பா, மன்னிச்சிருங்க ப்பா. அம்மா கூட சண்ட போடாதீங்க ப்பா ப்ளீஸ்.

பேரு‌ந்து கூட உள்ள வராத ஊருக்குள்ள நம்ம வீடு இருந்தாலும், சென்னை பட்டணம் அனுப்பி எங்கள படிக்க வச்சீங்க. ஊரே பொட்ட புள்ளைக்கு எதுக்கு படிப்புனு கேட்டு எகத்தாளம் பண்ணப்ப கூட யாரையும் கண்டுக்காம வேலைக்கு அனுப்புனீங்கள ப்பா. நான் இந்த முறை ஊருக்கு வரும் போது நீதிபதியா வருவேன் ப்பா. தேர்வுல தமிழ்நாடு அளவுல 5 வது இடம் புடிச்சிருக்கேன் ப்பா.

அம்மா, தம்பிகள், தாத்தா பாட்டி, அம்மா வளர்க்கும் ஆட்டு குட்டி, நீலவேணி,நீலவேணியோட மூனு கண்ணு குட்டி, என் அர்னால்டு எல்லாம், கண்ணு குள்ளயே நிக்குது ப்பா, நம்ம வீடும்.

ஊருக்கு வரேன் ப்பா அடுத்த வாரம்.

நாட்டு கோழி வாங்கி வைங்க ப்பா, நம்ம வீட்டுல வளர்க்கும் கோழி வேணாம் ப்பா. ஒரு ஸ்கேல் அளவு இடம் விட்டு தான் லெட்டர் எழுதி இருக்கேன்.

இப்படிக்கு

உங்க மக

நீதிபதி மாளவிகா இராஜேந்திரன்

Letter Contest

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.