ஐபிஎல்லில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் போலவே பல்வேறு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. மேலும் ஐபிஎல்க்கு என்று சில தனித்துவமான விதிகளும் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் வீரர்களை மெகா ஏலத்திலும், மினி ஏலத்திலும் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர டிரேடிங் சிஸ்டம் மூலமும் ஐபிஎல் அணிகளால் மற்ற அணிகள் உள்ள வீரர்களை வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு ஐபிஎல்லில் விதிகள் உள்ளது. ஆனால் இதற்கு அந்த சம்பந்தப்பட்ட வீரரின் அனுமதியும், ஐபிஎல் நிர்வாகத்தின் அனுமதியும் பெற வேண்டும். ஒரு வீரரை மற்றொரு வீரருக்காகவும் அல்லது பணத்திற்காகவும் அல்லது இரண்டிற்கும் சேர்த்து மாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில் ஐபிஎல் 2026ல் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாற்றப்போகும் வீரர்களை பற்றி பார்ப்போம்.
லியாம் லிவிங்ஸ்டோன்
இந்த ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி இருந்தார். ஆர்சிபி அணி கோப்பையை பெற்று இருந்தாலும் லியாம் லிவிங்ஸ்டோன் ரன்கள் அடிக்க தினரினார். 10 போட்டியில் விளையாடி அவரால் 112 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 8.75 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி. இவருக்கு பதிலாக சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரொமாரியோ ஷெப்பர்ட் பௌலிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். எனவே இவரை மும்பை இந்தியன்ஸ் அல்லது லக்னோ அணிகள் மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
இஷான் கிசான்
மும்பை அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இஷான் கிசான் இந்த ஆண்டு மெகா இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11.25 கோடிக்கு எடுத்தது. இருப்பினும் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் அதன் பிறகு ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். 14 போட்டிகளில் விளையாடி 354 மட்டுமே அடித்தார். இதனால் இஷான் கிஷனை ஹைதராபாத் அணி வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் அவரை தங்கள் அணியில் எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெலை 4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை தங்கள் அணியில் மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் மிடில் ஆர்டரில் ஒரு ஹிட்டர் தேவைப்படுகிறது.
வெங்கடேச ஐயர்
ஐபிஎல்லில் யாருமே எதிர்பார்க்காத ஒரு விலைக்கு கொல்கத்தா அநியாய எடுக்கப்பட்டார் வெங்கடேஷ் ஐயர். ஆனாலும் 11 போட்டிகளில் விளையாடி 142 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார் வெங்கடேச ஐயர். இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ள கொல்கத்தா அவரை மினி ஏலத்தில் கழட்டிவிடலாம் அல்லது வேறு அணிக்கு மாற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது.
சஞ்சு சம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சாம்சன்க்கு பதிலாக சிஎஸ்கே அணி அஸ்வின் மற்றும் சிவம் துபேவை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தோனிக்கு பிறகு சென்னை அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் தேவை என்பதால் சஞ்சு சம்சனை அதிக விலை கொடுத்து எடுக்க சென்னை அணி தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வீரரை மினி இடத்தில் எடுப்பது தான் ஒவ்வொரு அடிக்கும் சாதகமான விஷயமாக இருக்கும். இருப்பினும் மினி ஏலத்தில் ஒரு வீரர் அதிக விலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதால் டிரேடிங் மூலம் எடுத்துக் கொள்வது இரண்டு அணிகளுக்கும் சாதகமான ஒரு முடிவை தரலாம்.