சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

சென்னை: 3 ஆயிரம் பயணி​களை கையாளும் வகை​யில் சென்னை துறை​முக கப்​பல் முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தும் பணிக்​காக மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் அடிக்​கல் நாட்​டினார். இந்​தி​யா​வில் கப்​பல் போக்​கு​வரத்தை மேம்​படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்​டத்​தின் கீழ் பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் அமைச்​சகம் மேற்​கொண்​டுள்​ளது.

அதன் ஒரு பகு​தி​யாக ஆசிய உறுப்பு நாடு​களு​டன் கப்​பல் போக்​கு​வரத்து சம்​பந்​த​மான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்​னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் துறை அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் நிகழ்ச்​சி​யைத் தொடங்கி வைத்​தார். தொடர்ந்​து, சென்னை துறை​முகத்​தில் 4 புதிய திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: 2029-ம் ஆண்​டுக்​குள் கப்​பல் பயணி​கள் போக்​கு​வரத்தை இரட்​டிப்​பாக்​கு​வதை​யும், 5 ஆயிரம் கிலோ மீட்​டருக்​கும் அதி​க​மான கப்​பல் பயண வழித்​தடங்​களை உரு​வாக்​கு​வதை​யும் நோக்​க​மாகக் கொண்டு ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், இத்​திட்​டத்​தின் கீழ் ஆசி​ய-இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து கலந்​துரை​யாடல் நிகழ்வு இந்​தி​யா​வில் 2-வது முறை​யாக நடத்​தப்​பட்​டது.

இதில் கம்​போடி​யா, இந்​தோ​னேசி​யா, மலேசி​யா, மியான்​மர், பிலிப்​பைன்​ஸ், சிங்​கப்​பூர், தாய்​லாந்​து, வியட்​நாம் உள்​ளிட்ட 10 நாடு​களைச் சேர்ந்த கப்​பல் போக்​கு​வரத்து தொடர்​புடைய பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர். இந்த கலந்​துரை​யாடல் மூலம் இந்​தி​யா​வில் கப்​பல் போக்​கு​வரத்து மேம்​படும். சென்னை துறை​முகத்​தில் உள்ள கப்​பல் முனை​யம் தற்​போது 1,500 பயணி​களைக் கையாளும் வகை​யில் உள்​ளது.

3 ஆயிரம் பயணி​களைக் கையாளும் வகை​யில் இந்த முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தப்பட உள்​ளது. அதே​போன்று இங்​குள்ள ஏற்​றுமதி மற்​றும் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களை கையாள்​வதற்​கான சேமிப்பு மையம் ரூ.36.91 கோடி​யில் 9.90 ஹெக்​டேர் பரப்​பள​வில் மேம்​படுத்​தப்பட உள்​ளது.

கப்​பல் பணி​யாளர்​களின் நலன் மற்​றும் வசதிக்​காக செயல்​பட்டு வரும் கிளப் ரூ.5.10 கோடி​யில் மேம்​படுத்​தப்பட உள்​ளது. சென்னை துறை​முகத்​தில் உள்ள 100 ஆண்​டு​கள் பழமை​யான ஹைட்​ராலிக் பவர் கட்​டிடத்தை நினை​வுச் சின்​ன​மாக மாற்றி கடல்​சார் வரலாற்றை பொது​மக்​கள் அறிந்​து​கொள்​ளும் வகை​யில் அருங்​காட்​சி​யத்தை உரு​வாக்க அந்த கட்​டிடம் ரூ.5.25 கோடி​யில் மறுசீரமைப்பு செய்​யப்பட உள்​ளது. இந்த புதிய திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது.

2014-ம் ஆண்டு வரை கப்​பல் போக்​கு​வரத்தை பயன்​படுத்​திய பயணி​களின் எண்​ணிக்கை 84 ஆயிர​மாக இருந்​தது. பிரதமர் மோடி தலை​மையி​லான 11 ஆண்​டுக்​கால ஆட்​சி​யில் கப்​பல், துறை​முகம், நீர்​வழிச்​சாலை துறை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட பல்​வேறு மேம்​பாட்டு திட்​டங்​களால் இந்த எண்​ணிக்கை 5 லட்​ச​மாக உயர்ந்​துள்​ளது. 2029-ம் ஆண்​டுக்​குள் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்து மூலம் 10 லட்​சம் பயணி​களைக் கையாள்​வதை இலக்​காகக் கொண்​டுள்​ளோம்.

பசுமை தொழில்நுட்பம்: 2030-ம் ஆண்​டுக்​குள் உலகின் முதல் 10 கப்​பல் கட்​டும் தளங்​களில் ஒன்​றாக​வும், 2047-ம் ஆண்​டுக்​குள் உலகின் முதல் 5 கப்​பல் கட்​டும் தளங்​களில் ஒன்​றாக​வும் இந்​தியா மாறும். சுற்​றுச்​சூழலைக் கருத்​தில் கொண்டு கப்​பல் மற்​றும் துறை​முகங்​களில் பசுமை தொழில்​நுட்​பங்​களை மேற்​கொண்டு வரு​கிறோம்.

2050-ம் ஆண்​டுக்​குள் கப்​பல் மற்​றும் துறை​முகங்​கள் முழு​மை​யாக பசுமை தொழில்​நுட்​பங்​களை கொண்​ட​வை​யாக இருப்​ப​தற்​கான அனைத்து நடவடிக்​கைகளை​யும் மேற்​கொண்​டுள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின் போது மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் துறை செய​லா​ளர் ராமச்​சந்​திரன், சென்னை துறை​முக சபை தலை​வர்​ சுனீல்​பாலி​வால்​ ஆகியோர்​ உடனிருந்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.