ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர் என நேற்று தகவல் வெளியானது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி தீ விபத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.